பூஜாஅகம் என்னும் முதியோர் பராமரிப்பு இல்லம் வியாபார நோக்கத்திற்காகவோ அரசியல் இலாபத்திற்காகவோ உருவாக்கப்பட்ட அகம் அல்ல .மேற்கத்திய நாடுகளில் இருப்பது போல எமது நாட்டிலும் வயோதிபர்கள் கௌரவமரகவும் வசதியாகவும் வாழவேண்டும் என்னும் ஒரே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. தம் எதிர்காலச் சந்ததிக்காய் தம்மைத் தியாகம் செய்தவர்கள் தம்மைஓடாய் உருக்குலைத்து உழைத்து நம் வாழ்விற்கு உரம் ஊட்டியவர்கள் எம் முதியோர்கள் அவர்கள் ஆதரவின்றி மனஅமைதியின்றித் தவிக்கும் நிலையை அடியோடிமாற்றி அவர்களின் தேவைகளையும் மனஅழுத்தம் நோய் நொடி பராமரிப்பு அன்புகாட்டல் அரவனைத்தல் போன்ற இன்னோரன்ன அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யவேண்டும்.
Please Note: We do not accept any donations or gifts from 3rd parties
குறிப்பு: எவ்வித அன்பளிப்போ ,சர்மாணமோ ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது
“உங்கள் பெற்றோர் இனி எமது குழந்தைகள்”
சேவைகள்
முதியோருக்கான விசேட பராமரிப்பு
நவீனவசதிகளுடன் கூடிய சிறந்த பொழுதுபோக்குச் சாதனங்களுடன் பராமரிப்பு உபகரணங்கள் வைத்தியதாதி வசதிகளுடன் கூடிய ஓர் முதியோர் பாதுகாப்பு மையம்
கவனிப்பு வழங்கும் வசதிகள்.
சேவைகளை வழங்கும் ஊழியர்கள் தங்கள் ஆதரவையும் அன்பையும் முதியோர்களுக்கு வழங்குவார்கள்